திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் இணை தலைவர் தேர்ந்தெடுப்பதில் திமுக உட்கட்சி பூசல் : 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு

வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள்.
திண்டுக்கல் :
திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் மன்றத்தின் இணை தலைவர் தேர்ந்தெடுப்பதில் திமுக உட்கட்சி பூசல் ஏற்பட்டதால் 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் மற்றொரு பிரிவைச் சேர்ந்த திமுக உறுப்பினர் இணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 15 பேர் உறுப்பினர்களாக தெர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து அன்னகாமு என்பவரை ஊராட்சி மன்ற துணைத் தலைவராக தேர்ந்தெடுத்தனர். இதனிடைய அன்னகாமு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
மற்றொரு ஊராட்சி மன்ற உறுப்பினரும் இயற்கை எய்தினார். இதையடுத்து ஊராட்சி மன்றத்தில் தற்போது 13பேர் உறுப்பினராக இருந்து வருகின்றனர்.இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவருக்கு உதவியாக ஊராட்சி மன்ற பணிகளை இணைந்து மேற்கொள்ள இணை தலைவர் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக ஆதரவாளர்கள் விஜயலட்சுமி, தனலட்சுமி ,கனகராஜ் ஆகிய மூன்று பேர் போட்டியிட்டனர்.
இதில் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கும் போது திமுக ஆதரவாளர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் கடுமையாக பேசி வாக்குவாதம் செய்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனிடையே திமுக ஆதரவு உறுப்பினர்களான ஆறு ஊராட்சி உறுப்பினர்கள் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து மீதமிருந்த ஏழு பேர் சேர்ந்து தனலட்சுமி என்பவரை இணை தலைவராக ஒருமனதாக தேர்வு செய்தனர்.திமுக ஆதரவு உறுப்பினர்கள் இரு அணிகளாகப் பிரிந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் பஞ்சாயத்து அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu