திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 243 பள்ளி கட்டிடங்களை இடிக்க ஆட்சியர் உத்தரவு
மாவட்ட ஆட்சியர் ச. விசாகன்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 243 பள்ளி கட்டிடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் உத்தரவிட்டுள்ளார்
திருநெல்வேலியில் மழை சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியாகினர். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 1979 பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் மூலம் ஆய்வு செய்து மோசமான பலவீனமான கட்டிடங்களை கண்டறிந்து அதற்கான அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த ஆய்வின் முடிவில் திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 243 பள்ளி கட்டிடங்கள் மிகவும் ஆபத்தான மற்றும் பழமையான கட்டிடங்கள் என தெரிய வந்துள்ளது. அவற்றை அரசு வழிகாட்டுதல்படி, இடிக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி தற்போது கழிப்பறை சமையலறை வகுப்பறை கட்டிடங்கள் என 90 கட்டிடங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள கட்டிடங்களையும் உடனே இடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu