திண்டுக்கல் புனித தூய வளனார் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை
இயேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25ஆம் தேதி, கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி திண்டுக்கல் மாநகரில் பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
திண்டுக்கல் 1866 ம் ஆண்டு கட்டபட்ட பழமை வாய்ந்த புனித வியாகுல அன்னை ஆலயத்தில் நள்ளிரவில் ஆயர் தாமஸ்பால்சாமி தலைமையில் உதவி பங்குத்தந்தை பங்கேற்ற சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இத்திருப்பலியில் நடுவே இரவு சரியாக 12 மணிக்கு, இதய வடிவில் காட்சி தரும் குழந்தை இயேசு பிறப்பது போன்ற காட்சி சிறப்பாக வடிவமைக்கப்பட்டு செய்து காண்பிக்கப்பட்டது.
குழந்தை இயேசு பிறந்தபோது, ஆலயத்தில் பக்தர்கள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்து உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து, ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இத்திருப்பலியில் திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து 1000 க்கும் மேற்பட்ட. கிறிஸ்தவர்கள் மற்றும் அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu