திண்டுக்கல்லில் அரசு அதிகாரிகளை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் அரசு அதிகாரிகளை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
X

திண்டுக்கல்லில் நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் தலைமை வகித்தார். பிரதமர் நரேந்திமோடியின், தூய்மை இந்தியா திட்ட பணிகளில் பரப்புரையாளர்கள் நியமிப்பதில் தொடர்ந்து நடைபெற்று வரும் முறைகேடுகளை கண்டித்தும், ஏற்கனவே பணி செய்த பணியாளர்களை நீக்கம் செய்து விட்டு புதிய நபர்களை லஞ்சம் பெற்றுக் கொண்டு நியமிக்கும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை கண்டித்தும், மூன்று மாதமாக வழங்காத சம்பள தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!