திண்டுக்கல் பெண் சாமியார் மீது ரூ.1.33 கோடி மோசடி செய்ததாக மேலும் ஒரு வழக்கு

திண்டுக்கல் பெண் சாமியார் மீது ரூ.1.33 கோடி மோசடி செய்ததாக மேலும் ஒரு  வழக்கு
X
நிலக்கோட்டை மகளிர் சிறையில் உள்ள பவித்ரா காளி மாதாவை இந்த வழக்கிலும் கைது செய்ய கைது வாரண்ட் பெற்றுள்ளனர்.

திண்டுக்கல் பெண் சாமியார் பவித்ரா காளிமாதா மீது ரூ.1.33 கோடி மோசடி செய்ததாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மேற்கு ஆரோக்கிய மாதா தெரு பகுதியை சேர்ந்த பவித்ரா(44) இவர் தான் கடவுள் காளியின் அவதாரம் என்று கூறுகிறார். கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்ச்சியும் விளம்பரப்படுத்தி நடத்தி வருகிறார்.இந்நிலையில் கடந்த வாரம் நிலக்கோட்டை காவல்துறையினர் நிலம் வாங்கி தருவதாக ரூ.17 லட்சம், 60 பவுன் வாங்கிக்கொண்டு மோசடி செய்த வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் தஞ்சாவூரை சேர்ந்த சூரியமூர்த்தி (54) என்பவர் தன்னிடம் பெட்ரோல் பங்கு உரிமம் வாங்கி தருவதாக கூறி ரூ 1.33 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு பெட்ரோல் பங்க் உரிமம் வாங்கித் தராமல் ஏமாற்றுவதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நிலக்கோட்டை மகளிர் சிறையில் உள்ள பவித்ரா காளி மாதாவை இந்த வழக்கிலும் கைது செய்ய கைது வாரண்ட் பெற்றுள்ளனர்.

நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் குரு வெங்கட்ராஜ், சார்பு ஆய்வாளர் தயாநிதி, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவலர்கள் கொண்ட குழுவினர் நீதிமன்றத்தில் திண்டுக்கல் மேற்கு ஆரோக்கிய மாதா தெருவில் உள்ள பவித்ரா காளிமாதா வீட்டை சோதனை செய்ய உத்தரவு பெற்று வீட்டிற்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!