திருவண்ணாமலை நகை மோசடியில் ரூ 5.30 வசூல்: அமைச்சர் ஐ. பெரியசாமி தகவல்
திண்டுக்கல்லில் கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்ற 68வது கூட்டுறவு வார விழாவில் பங்கேற்ற அமைச்சர் ஐ.பெரியசாமி.
டெல்டா பகுதியில் வெள்ள பாதிப்பு குறித்த அறிக்கை நாளை மறுநாள் முதல் அமைச்சரிடம் வழங்கப்படும் .திருவண்ணாமலையில் நகை மோசடியில் ரூ 5.30 வசூல் செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற 68வது கூட்டுறவு வார விழா துவக்க நாள் நிகழ்ச்சி திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி கலந்து கொண்டார். முன்னதாக வளாகதில் கூட்டுறவு கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்
-பின்ன்ர் அமைச்சர் ஐ பெரியசாமி செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:டெல்டா பகுதியில் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உட்பட டெல்டா மாவட்டங்களில் 17 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் எனது தலைமையிலான அமைச்சர்கள் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். சேத விவர அறிக்கை நாளை தமிழக முதல்வரிடம் வழங்க உள்ளோம். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு நபரே 600 கடன் 700 கடன்கள் என பல கடன் சங்கம் மற்றும் பல வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
தொடர்ந்து எடுத்த நடவடிக்கையின் பேரில் தற்பொழுது ரூ 5.30 கோடி திரும்ப பெறப்பட்டுள்ளது. ராமநாதபுரம் கிளியூர் வங்கி கிளையில் ஒன்றரை கோடி மதிப்பில் கவரிங் நகைகளை அடமானமாக வைத்து பணம் பெற்று மோசடி செய்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வங்கி செயலர், அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்றார் அமைச்சர் ஐ.பெரியசாமி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu