தேர்தலை புறக்கணிப்போம்- குரும்பர் மீட்புக்குழு

தேர்தலை புறக்கணிப்போம்- குரும்பர் மீட்புக்குழு
X

வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தமிழ்நாடு குரும்பர் சமுதாய மக்கள் உரிமை மீட்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு குரும்பர் சமுதாய மக்கள் உரிமை மீட்புக்குழு கூட்டம் திண்டுக்கல் பழனி ரோட்டில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கௌரவத் தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். தலைவர் வீரமணி, துணைத்தலைவர் பொன்ராஜ், செயலாளர் பாண்டியன், பொருளாளர் முனீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழக அரசு கடந்த 26.2.2021 அன்று வெளியிட்ட அரசாணையில் குறிப்பிட்டுள்ள எம்பிசி உள் ஒதுக்கீடு மசோதாவால் குரும்பர் சமுதாய மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகஅரசு இந்த அரசாணையை உடனடியாக திரும்பப் பெற்று, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய பின் உள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் குரும்பர் சமுதாய மக்கள் அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பை தெரிவிப்பது எனவும் மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலை ஒட்டு மொத்தமாக புறக்கணிப்பு செய்வது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மீட்புக் குழு உறுப்பினர்கள் தங்கராஜ், லோகநாதன், ரவி, ராஜகோபால், தனசேகர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future