திண்டுக்கல்லில் வீடு வீடாக சென்று டெங்கு விழிப்புணர்வு தீவிரம்
புகை தெளிப்பான் மூலம் கொசுக்களை ஒழிக்கும் பணியை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர்
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டு ள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. திண்டுக்கல்லில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில் உற்பத்தியாகும் கொசுக்களால் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 200க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்காக தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுகாதாரம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு குறித்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆர்.எம். காலனி, ராமநாதபுரம், அசோக் நகர் உள்ளிட்ட பகுதியில் இன்று காலை வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்தார்.
அப்போது மக்கும், மக்கா குப்பைகள் தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும். நமது இடத்தை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தொட்டிகளை சுத்தமாகவும், காற்று புகாதபடி மூடி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். பள்ளி குழந்தைகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி சக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் குடியிருப்பு பகுதிகளில் புகை தெளிப்பான் மூலம் கொசுக்களை ஒழிக்கும் பணியை பார்வையிட்டார். வீட்டில் மாடி தோட்டம், காலி இடங்களில் காய்கறி தோட்டம் அமைத்தவர்களுக்கு மாநகராட்சி உரங்களை பயன்படுத்த வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் ராஜ்மோகன், உதவி ஆணையர் வில்லியம் சகாயராஜ், மண்டல தலைவர் ஆனந்த், சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணா மூர்த்தி, பாலமுருகன், தங்கவேல், முகமது ஹனீபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu