கண்டிப்பாக ஓட்டு போட வாங்க: பூத் சிலிப் கொடுத்து அழைப்பு விடுத்த மாவட்ட ஆட்சியர்
வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கு பணியை தொடங்கி வைத்த ஆட்சியர்
திண்டுக்கல் மாவட்டத்தில் 7,80,096 ஆண், 8,26,737 பெண், 218 மூன்றாம் பாலினம் என 16,07,051 வாக்காளர்கள் உள்ளனர். ஏப்ரல்.19 ல் வாக்குப்பதிவு என்பதால் திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கப்பட்டது.
மாநிலம், சட்டசபை தொகுதி, பெயர், பாலினம், வாக்காளர் அடையாள அட்டை எண், தந்தை பெயர், பாகம் எண், பாகத்தின் பெயர், வரிசை எண், வாக்குச்சாவடியின் பெயர், வாக்குப்பதிவு நாள், வாக்குப்பதிவு நேரம், தேர்தல் ஆணைய இணையதள முகவரி, கட்டணமில்லா தொலைபேசி எண்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலரின் பெயர் , எண் உள்ளிட்ட தகவல்கள் தமிழ் , ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளன.
இதன் பூத் சிலிப் வழங்கும் பணியினை சென்னமநாயக்கன்பட்டி இந்திரா நகரில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய ஆட்சியர், நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம், ஆனால் கட்டாயம் உங்களின் வாக்கை பதிவு செய்து விடுங்கள். வாக்குச்சாவடிகளில் அலுவலர்களாகிய நாங்கள் காத்திருப்போம். கண்டிப்பாக வாக்களிக்க வாங்க. நீங்கள் உங்களது வாக்குச்சாவடி எங்கே என மிரட்டி கேட்கவும் உங்களுக்கு உரிமை உண்டு. காரணங்கள் கூறி வாக்களிப்பதை தவிர்க்காதீர்கள்.
100 சதவீதம் அனைவரும் வர வேண்டும். பெண்களுக்கு தனியே வரிசைகள் உள்ளன. மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பார்வையற்ற, உடல்நலமிலாத வாக்காளர்கள் வாக்களிக்க செய்வதற்காக வாக்களிக்கும் வயது வந்த ஒரு துணைவரை அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu