கோவில் திருவிழாவில் ஜல்லிகட்டு போட்டிகள்

கோவில் திருவிழாவில் ஜல்லிகட்டு போட்டிகள்
X
திண்டுக்கல் மாவட்டம் பில்லமநாயக்கன்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய முறையில் ஜல்லிகட்டு போட்டிகள் 650 காளைகள் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று நடைபெற்று வருகின்றது. 20-க்கும் மேற்பட்டோர் காயம்.

திண்டுக்கல் மாவட்டம் பில்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் சுயம்பு ஸ்ரீ கதிர் நரசிங்க பெருமாள் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ பகவதி அம்மன் ஸ்ரீ முத்தாரம்மன் ஸ்ரீ முனியப்பன் கோவில்களின் திருவிழாவினை முன்னிட்டு, திருவிழாவின் முக்கிய நிகழச்சிவான பாரம்பரியமுறைப்படி ஜல்லிகட்டுப் போட்டி நடைபெற்றது. இதற்காக திண்டுக்கல் , திருச்சி , பாலமேடு , அலங்காநல்லூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 600 காளைகள் கலந்து கொண்டன. ஊர் வழக்கப்படி முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவந்துள்ள காளைகளை வாடிவாசல் வழியாக ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது. முரட்டுகாளைகளை அடக்குவதற்கு இளைஞர்கள் முற்படும் போது இளைஞர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது. ஜல்லிகட்டில் சிறந்த காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், தங்க காசு, வெள்ளிக்காசு, வேட்டி, துண்டு, கட்டில், பீரோ, சைக்கிள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.


விழாவில் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 250 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கால்நடை மருத்துவர்கள், பொது மருத்துவர்கள் சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் கோட்டாச்சியர் உஷா கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சீறி வந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள் 20 பேருக்கு காயம் ஏற்படுகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!