திண்டுக்கல்லில் சிலம்பப் போட்டி

திண்டுக்கல்லில் சிலம்பப் போட்டி
X
திண்டுக்கல் மாவட்ட சிலம்ப கழகத்தின் 36வது ஆண்டு விழாவை முன்னிட்டு சிலம்பப் போட்டிகள் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட சிலம்ப கழகத்தின் 36 வது ஆண்டு விழா தனியார் கலைக்கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் 10 வயது, 14 வயது, 17 வயது உள்ளிட்டோருக்கான போட்டியும், 19 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு கான போட்டிகளும் நடத்தப்பட்டன. சிலம்ப வீரர்கள் தனித்திறன், நெடுங்கம்பு, இரட்டைக் கம்பு, சுருள் வால், கத்தி, ஈட்டி, உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெறுபவர்கள் நேரடியாக மார்ச் 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை கோவையில் நடைபெற உள்ள மாநில அளவிலான சிலம்ப போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர். போட்டிகளில் பங்குபெற மாவட்டம் முழுவதிலும் இருந்து 200க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் பங்கேற்றனர். போட்டிகளை காண ஏராளமான பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் வந்திருந்தனர்.

Tags

Next Story