காதலியை பார்க்க சென்ற இளைஞருக்கு கத்தி குத்து

காதலியை பார்க்க சென்ற இளைஞருக்கு கத்தி குத்து
X
திண்டுக்கல் அருகே காதலியை பார்க்க சென்ற இளைஞரை கத்தியால் குத்திய இளம்பெண்ணின் தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார் . இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறார். வினோத்குமார் தன்னுடன் கல்லூரியில் பயின்ற பிள்ளையார்நத்தத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகள் மோனிகாவை கல்லூரி காலத்தில் இருந்து காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இன்று வினோத்குமார் மோனிகாவின் சந்திப்பதற்காக பிள்ளையார்நத்தம் சென்றுள்ளார் . இதனை கண்டு ஆத்திரமடைந்த செல்வராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வினோத்குமாரின் வயிற்றில் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த வினோத்குமார் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கொலை முயற்சி குறித்த வழக்கு பதிவு செய்து திண்டுக்கல் தாலுகா காவல் துறையினர் செல்வராஜை கைது செய்தனர்.

Tags

Next Story
ai powered agriculture