வருவாய்த்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்
தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை ஊழியர்கள் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 50க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டம் பாதிப்புகளை உடனே சரி செய்திட வேண்டும். அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும். துணை வட்டாட்சியர் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தனி ஊதியம் ஆயிரத்து 300 வழங்க வேண்டும் முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு 9300 இணையான ஆரம்ப ஊதியம் 36 ஆயிரத்து 900 மற்றும் அலுவலக உதவியாளர்கள் எழுத்தாளர்கள் தனி ஊதியம் வழங்கிட வேண்டும். கருணை அடிப்படை பணி நியமனமதாரர்களின் பணியினை ஒரே அரசாணையில் வரன்முறை செய்து ஆணையிட மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் அளிக்கப்பட்ட வேண்டும். மாவட்டங்களில் அதிக அளவில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகளை கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினர். போராட்டத்தில் வருவாய்த்துறை மாவட்டத் தலைவர் ஜான் பாஸ்டின். மாவட்ட செயலாளர் சுகந்தி மற்றும் ராஜேந்திரன் பாண்டி உட்பட பல்வேறு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu