அதிமுக பிரமுகர் அடித்து கொலை
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே செங்கோட்டையை சேர்ந்த செல்வம் மகன் நாகராஜ் வயது 35. இவர் நிலக்கோட்டை சங்கரன் சிலை அருகே உள்ள அண்ணா ஆட்டோ நிலையத்தில் ஆட்டோ டிரைவராக தொழில் செய்து வருகிறார். இவரிடம் நேற்று இரவு நிலக்கோட்டை அருகே உள்ள கொங்கர்குளத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் கண்டிகருப்பண்ணன் வயது 46. ஆட்டோ சவாரிக்கு வேண்டுமென்று குடிபோதையில் வந்து கேட்டதாக கூறப்படுகிறது.
அப்போது நாகராஜனுக்கும், கண்டி கருப்பனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. உடனடியாக நாகராஜனை, கண்டி கருப்பன் உறவினர்கள் சேர்ந்தும் தாக்கி உள்ளார்கள். பின்னர் நாகராஜன் செங்கோட்டைக்கு ஆட்டோவில் தப்பி ஓடிவிட்டார். அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சியின் நகரச் செயலாளரும், கொங்குகர்குளம் தங்கபாண்டி வயது 37 என்பவர் தலைமையில் கண்டி கருப்பன், பிரதாப், ஜான்சன் என்ற சின்னகருப்பன், கணேசன், குட்டையன் என்ற கருப்பையா, சின்னராசு , இருளப்பன் உள்பட மேலும் 10 பேர் கையில் கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கொங்கர்குளத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் நாகராஜனின் சொந்த ஊரான செங்கோட்டை கிராமத்திற்குள் புகுந்த அங்கிருந்தவர்களிடம் நாகராஜன் வீடு எங்கிருக்கிறது என்று அதட்டி சத்தம்போட்டு கேட்டனர்.
அப்போது செங்கோட்டை காளியம்மன் கோவிலில் நின்றுகொண்டிருந்த செங்கோட்டையை சேர்ந்தவரும், நிலக்கோட்டை மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் வக்கீல் குமாஸ்தாவாகவும், அ.தி.மு.க. கட்சியின் பிரமுகரான செல்வராஜ் வயது 55 . அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்கள் ஆயுதங்களோடு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்களைப் பார்த்து எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக்கொள்ளலாம் என்று அறிவுரை கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த தங்கப்பாண்டி மற்றும் அவருடன் வந்த இளைஞர்கள் செல்வராஜை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த செல்வராஜ் மயக்க நிலையில் வாயில் நுரையுடன் கீழே விழுந்தார். உடனே அங்கு இருந்தவர்கள் ஓடி வந்து செல்வராஜை நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கிருந்த மருத்துவர்கள் செல்வராஜ்யின் உடலை பரிசோதித்து விட்டு ஏற்கனவே இறந்துவிட்டார் என தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து உடனடியாக நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து நிலக்கோட்டை போலீசில் செல்வராஜ் மகன் மணி கொடுத்த புகாரின் படி தங்கப்பாண்டி , கண்டி கருப்பன், பிரதாப், ஜான்சன் என்ற சின்னகருப்பன், கணேசன், குட்டையன் என்ற கருப்பையா, சின்னராசு, இருளப்பன் மற்றும் 10 பேர்கள் மீது பதிவு செய்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் நகரச் செயலாளர் தங்கபாண்டியை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu