திண்டுக்கல் நாகல் நகர் பள்ளிவாசலில் கந்தூரி விழா

திண்டுக்கல் நாகல் நகர் பள்ளிவாசலில் கந்தூரி விழா
X
திண்டுக்கல் நாகல் நகர் பள்ளிவாசலில் கந்தூரி விழா கொண்டாடப்பட்டது. 25 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

திண்டுக்கல் நாகல் நகர் ஜூம்ஆ பள்ளிவாசல் புதிதாக கட்டப்பட்டு கடந்த 12ம் தேதி திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று (14. 02. 21) புதிய பள்ளிவாசலில் நபிகள் நாயகம் பெயரில் கந்தூரி விழா கொண்டாடப்பட்டது. இதில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் அனைத்து மதத்தை சார்ந்த 25 ஆயித்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதற்காக பள்ளிவாசல் வளாகத்தில் இரண்டரை டன் அரிசி மற்றும் 2500 கிலோ கறியுடன் பிரியாணி தயாரிக்கப்பட்டு பொதுக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் நாகல் நகர் பள்ளிவாசல் தலைவர் அஹமது புகாரி, செயலாளர் அலாவுதீன், பொருளாளர் செளக்கத் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story