திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் ரத விழா

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் ரத விழா
X
புகழ்பெற்ற அருள்மிகு திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திரு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பூச்சொரிதல் ரத விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா நேற்று பூத்த மலர் அலங்காரத்துடன் தொடங்கியது. விழாவின் இரண்டாவது நாளான இன்று இன்று பூச்சொரிதல் ரத ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.


இந்த வருடம் 51 ஆவது ஆண்டு விழாவாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ஊர்வலத்தில் முருகன் விநாயகர் சரஸ்வதி லட்சுமி புல்லாங்குழல் கிருஷ்ணன் ஐயப்பன் விஸ்வரூப சிவலிங்கம் ஆகிய தெய்வங்களுடன் , அன்னை கோட்டை மாரியம்மன் லட்சக்கணக்கான பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த ஆண்டு அம்மன் அலங்கார ரதம் 7 மலைகளுக்கு நடுவே காட்சி தரும் ஏழுமலையானின் திருவுருவ ரதமும் இடம்பெற்றது. கோலாட்டம் காவடியாட்டம் மேளதாளங்கள் முழங்க நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அம்மனை ஆங்காங்கே ஆயிரக்கணக்கான வண்ணப்பூக்கள் காத்திருந்த பக்தர்கள் வரவேற்று பூத்தூவி வழிபட்டனர்.



Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்