தியேட்டர் ஆப் பெடகெஜி – கல்வியியல் அறிமுகம்
திண்டுக்கல் ஆர் வி எஸ் குழுமத்தில் ஆர்விஎஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள வளாகத்தில் ஆசிரியர்களுக்கான மகிழ்வோடு கற்பித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திரைப்பட நடிகர் சண்முகராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆர்விஎஸ் கல்வி குழுமத்தின் சிஇஓ பாலமுருகன், ஆர்விஎஸ் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கதிர்வேல், மற்றும் உமா பிரியன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வரும் .2021- 22 கல்வி ஆண்டில் கல்வியியல் கல்லூரியில் இந்தியாவிலேயே முதன்முறையாக ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனத்தில் மற்ற பாடத் திட்டங்களுடன் புதிதாக தியேட்டர் ஆப் பெடகெஜி (கல்வியியல்) என்ற பாடத்திட்டத்திற்கான துறை தொடங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வகுப்பறையில் சூழ்நிலைக்கு நாடக முறையில் நடித்து காட்டியவாறு எளிமையாக கற்பித்தல் வேண்டும் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆர் வி எஸ் கல்வி குழுமத்தை சேர்ந்த அனைத்துத்துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளரிடம் பேசிய நடிகர் சண்முகராஜ் சர்வதேச அளவில் புகழ்பெற்ற தியேட்டர் ஆப் பெடகெஜி இந்தியாவிலேயே இந்தக் கல்லூரியில் தான் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது என்றும் இந்த கல்வி மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஒரு எளிய புரிதல் முறையின் மூலம் கற்பிக்க ஏதுவாக இந்த துறை அமையும் என கூறினார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu