வழக்கறிஞர் வீட்டில் அதிரடி சோதனை

வழக்கறிஞர் வீட்டில் அதிரடி சோதனை
X
காட்டு எருமை மாட்டின் தலை, 2 மான் கொம்புகளை திண்டுக்கல் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் வழக்கறிஞர் வீட்டிலிருந்து காட்டு எருமை மாட்டின் தலை மற்றும் 2 மான் கொம்புகளை திண்டுக்கல் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்


திண்டுக்கல் கல்லறை தோட்டத்தில் இருந்து பழனி சாலையில் அமைந்துள்ளது வழக்கறிஞர் பாலசுப்பிரமணியத்தின் இல்லம். இவர் மூத்த வழக்கறிஞர் ஆவார் திண்டுக்கல் கோர்ட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது இல்லத்தில் காட்டு எருமை மாட்டின் தலை மற்றும் மான் கொம்புகள் உள்ளதாக திண்டுக்கல் வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இன்று காலை அனைத்து துறை யினர் பாலசுப்பிரமணியத்தின் இல்லத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பெரிய காட்டு எருமை மாட்டின் தலை ஒன்றும் 2 மான் கொம்புகளும் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு என்னவென்று தெரியவில்லை. இந்த விலங்குகளை இவரே வேட்டையாடினரா? இல்லை யாரிடமும் இருந்து வாங்கினாரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!