ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி அமைதி போராட்டம்

ரஜினி அரசியலுக்கு வர வலியுறுத்தி அமைதி போராட்டம்
X

ரஜினிகாந்த் அரசியல் முடிவு குறித்து மறுபரிசீலனை செய்யக் கோரி திண்டுக்கல்லில் ரஜினி ரசிகர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலை சந்திப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்போடு பல்வேறு பணிகளை செய்து வந்தனர். இந்நிலையில் ரஜினிகாந்த் தான் அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்றும் கட்சி தொடங்காமல் மக்களுக்கு என்ன நல்லது செய்ய முடியுமோ அதை செய்வதாக அறிவித்ததை அடுத்து ரஜினிகாந்த் அரசியல் முடிவுக்கு அவரது ரசிகர்கள் பலர் எதிரான கருத்துக்களையும் பலர் அவருக்கு ஆதரவான கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் ரஜினிகாந்த் தனது அரசியல் முடிவை மறுபரிசீலனை செய்து அரசியலுக்கு வர வேண்டும் எனக் கூறி திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் அவரது ரசிகர்கள் இன்று அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து கருப்புச்சட்டை அணிந்து பங்கு பெற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!