பழனி : ரோப் கார் சேவை மீண்டும் இயக்கம்

பழனி : ரோப் கார் சேவை மீண்டும் இயக்கம்
X

பழனி முருகன் கோவிலில் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு பக்தர்கள் மலை வீதி செல்வதற்காக ரோப்கார் சேவை இயக்கப்பட்டது.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பழனிக்கு வரக்கூடிய பக்தர்கள் மலையடிவாரத்திலிருந்து மலைமீது சென்று சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக ரோப்கார் சேவை இயக்கப்பட்டு வந்தது. ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோப்கார் சேவை தற்போது மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பழனி கோவில் இணை ஆணையர் கிராந்தி குமார் பாடி ரோப்கார் சேவையை துவங்கி வைத்தார். ரோப் காரில் பயணம் செய்ய விரும்பும் பக்தர்கள் மலை மீது சாமி தரிசனம் செய்ய இணையவழியில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!