நீங்க பட்டா மாறுதல் செய்யலையா? இதைப்படிங்க...

நீங்க பட்டா மாறுதல் செய்யலையா? இதைப்படிங்க...
X
நாம் சொத்துக்களை வாங்கிய பின் பட்டா மாறுதல் செய்யாவிடில் என்னென்ன பிரச்சனைகளை சந்திப்போம் என்பதை தெரிந்துகொள்வோம்.

அசையா சொத்துக்களான நிலம், வீட்டு மனைகள் மற்றும் கட்டிடங்களை வாங்கும்போது அவற்றின் உரிமையாளர் பெயரை முறைப்படி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து மாற்றிக்கொள்ள வேண்டும். இது பட்டா மாறுதல் என்றழைப்பர்.

இல்லையென்றால் நீங்கள் வாங்கிய சொத்துக்கு பழைய உரிமையாளர் பெயரே பட்டாவில் இருக்கும். பத்திரப்பதிவு செய்யும்போது உங்கள் பெயருக்கு சொத்தை மாற்றினாலும், பட்டாவுக்கும் சேர்த்து விண்ணப்பித்து உங்கள் பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும்.

அப்படி செய்தால் மட்டுமே உங்களுடைய சொத்து என்பது முழுமையாகும்.

என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்?

  • நீங்கள் பட்டா பெறாமல் இருப்பதால் பழைய உரிமையாளர் தன்னுடைய பட்டாவை சொத்து வாங்கும் மற்றவரிடம் காண்பித்து முழு சொத்தும் தனக்குரியது என்று கூறலாம்.
  • பழைய உரிமையாளர் உங்கள் சொத்துக்கு தீர்வை செலுத்தி வந்தால், அதன் மூலம் கூட சொத்துக்கு சொந்தம் கொண்டாடும் நிலை ஏற்படும்.
  • மற்றவருக்கு சொத்தை விற்பனை செய்யும்போது பிரச்சினை ஏற்படும்.
  • பட்டா பெயர் மாற்றம் செய்யாவிடில் வருவாய் துறையின் ஆவணங்களின் படி நீங்கள் சொத்துக்கு உரிமை கொண்டாட முடியாது.
  • சொத்தை உங்களுக்கு விற்பனை செய்தவர் இறந்துவிட்டால் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றுவதற்கு அலைச்சலையும், சிரமத்தையும் சந்திக்க வேண்டிவரும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!