வடமாநில தொழிலாளர்களால் இப்படியும் ஒரு ஆபத்து இருக்கிறது தெரியுமா?
பைல் படம்.
தமிழ்நாட்டில் உள்ள ஓட்டல்கள், தொழில்நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் ஜார்கண்ட், பீகார், ஒடிசா போன்ற வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமான அளவில் வேலை செய்து வருகிறார்கள். இப்படி வேலை செய்பவர்களாலும் ஒரு ஆபத்து உள்ளது என்பதை பதிவிட்டு உள்ளார் வழக்கறிஞர் ஆர். மனோகரன். இவர் ESI & PF மற்றும் தொழிலாளர் சட்ட வழக்கறிஞர் ஆவார்.
உயர்நீதிமன்றங்களில் வடமாநில தொழிலாளர்கள், தமிழ் நாட்டில் உள்ள முதலாளிகள் மீது வழக்குகள் பதிந்து, ரூ. 40-முதல் 50 லட்சம் வரை நூதன முறையில் பணம் பறித்து வரும் செய்தி தற்பொழுது தெரிய வந்துள்ளது. நிறுவனத்தில் கொடுமை படுத்துவதாகவும், சம்பளம் கொடுப்பதில்லை எனவும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிந்து வருகின்றனர். பணியிடத்தில் cellphone video மற்றும் photo எடுத்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்கின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள முதலாளிகள் மீது அந்த மாநில உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட் கொடுப்பதால் சாதாரண சிவில் வழக்கு கிரிமினல் வழக்காக மாறி, அந்த மாநில போலீசார் வந்து இங்கு உள்ள முதலாளிகளை கைது செய்கின்றனர். பாட்னா மற்றும் ராஞ்சி உயர்நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு முதலாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
வழக்கிலிருந்து விடுவிக்க பெரிய தொகை பேரம் பேசுகிறார்கள். எனவே தமிழ்நாட்டு சிறு, குறு தொழிலதிபர்கள் கவனமாக வடமாநில தொழிலாளர்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டிய நேரம் இது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu