கிசான் சம்மன் திட்டத்தில் உங்களுக்கு பணம் வந்ததா? ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

கிசான் சம்மன் திட்டத்தில் உங்களுக்கு பணம் வந்ததா? ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
X
பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் தங்களது தவணைத் தாெகையின் விவரங்களை விவசாயிகள் தங்களது மொபைலிலேயே தெரிந்துகொள்ளலாம்.

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தில் உங்களது மொபைல் எண்ணை வைத்து உங்கள் பணப்பரிவர்த்தனை நிலையை பார்ப்பது எப்படி என்று தற்போது தெரிந்துகொள்வோம்.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் கடந்த 2018ம் ஆண்டு முதல் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், விவசாயிகள் பயிர் சாகுபடி செய்யத் தேவையான இடு பொருட்களை வாங்க வசதியாக உதவித்தொகையாக அளித்து வருகிறது.

இந்த உதவி தொகை, விவசாய குடும்பங்களுக்கு 4 மாதத்திற்கு ஒரு முறை,ரூ. 2,000 வீதம், ஆண்டுக்கு 3 தவணைகளாக, ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 11 கோடியே 44 லட்சம் விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த திட்டத்தின் 9 வது தவணைத்தொகையை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார். இதனைத்தொடர்ந்து ஓரிரு நாட்களில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

இந்த திட்டத்தில் விவசாயிகளின் உதவித்தொகை வங்கிக்கணக்கில் வந்துள்ளதா என வங்கிக்கு சென்று பார்த்தால் மட்டுமே விவசாயிகளுக்கு தெரியவருகிறது. இல்லையென்றால், அக்கம் பக்க விவசாயிகள் தெரிவித்தால் மட்டுமே அவர்களுக்கு தெரிய வருகிறது.

இந்த சிரமங்களை போக்கும் வகையில் இதற்கென தனி இணையதள சேவையை டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு செய்து வருகிறது. பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்டத்தில் விவசாயிகளுக்கு செலுத்தப்படும் தொகை மற்றும் தவணையின் விபரங்களை நீங்களே உங்களது மொபைல் போனிலோ, அல்லது கணிணி மையத்திலோ பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

கிசான் சம்மன் திட்டத்தில் உங்களுக்கு பணம் வந்ததா? ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்டத்தின் இணையதளமான https://pmkisan.gov.in/ என்ற முகவரியில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

இதோ உங்களுக்கான வழிமுறைகள்:

https://pmkisan.gov.in/ என்ற முகவரியில் சென்று Beneficiary Status சென்று கிளிக் செய்யவும்.




இந்த ஸ்கீரினில் ஆதார்கார்டு எண், வங்கிக்கணக்கு எண் மற்றும் மொபைல் எண்கள் ஏதாவது ஒன்றை வைத்து Get Data கிளிக் செய்யவும்.


அடுத்த ஸ்கீரினில் உங்களுடைய பெயர், ஆதார்கார்டு எண், வங்கிக்கணக்கு எண் மற்றும் மொபைல் எண்கள், உங்களது கணக்கில் நிலை, எப்போது பதிவு செய்யப்பட்டது உள்ளிட்டவைகளின் விபரங்கள் இருக்கும். அதற்கு கீழே உங்களுக்கு எத்தனை தவணைகள் வந்துள்ளது. நடப்பு தவணையின் நிலை, வங்கிக்கு பணம் சென்றுவிட்டதா என்பது குறித்த விபரங்கள் காட்சிப்படுத்தும்.



மேலும், விவசாயிகள் இந்த திட்டத்தின் விபரங்களை இதற்கென வடிவைமக்கப்பட்ட மொபைல் செயலி மூலம் தங்களது மொபைலில் இருந்தே சுலபமாக தெரிந்துகொள்ளலாம்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!