சென்னையில் குப்பை தொட்டியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பு வைர நெக்லஸ் மீட்பு
நெக்லஸை உரிமையாளரிடம் ஒப்படைக்கும் தூய்மை பணியாளர்.
சென்னையில் குப்பையில் தவறுதலாக வீசிய ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ் தூய்மை பணியாளர் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.
சென்னை மாநகரின் விருகம்பாக்கத்தில் உள்ள ரஜமன்னார் சாலை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் தேவராஜ். இவர் தனது வீட்டிலிருந்த ரூ.5 லட்சம் மதிப்பு வைர நெக்லஸை, தவறுதலாக குப்பைகளுடன் சேர்த்து மாநகராட்சி சார்பில் குப்பை சேகரிக்கும் அர்பேசர் ஸ்மித் நிறுவன குப்பை வாகனத்தில் கொட்டியுள்ளார்.
பின்னர் தான் வைத்திருந்த வைர நெக்லஸை தேடியபோது மாயமானது தெரியவந்தது. வீடு முழுவதும் தேடியும் கிடைக்காததால், குப்பைகளில் வீசி இருக்கலாம் என அவர் உணர்ந்தார். பின்னர் தேவராஜ் உடனடியாக உர்பேசர் நிறுவனத்தை தொடர்புகொண்டு உதவி கேட்டுள்ளார். அதன் அடிப்படையில் அப்பகுதியில் குப்பை சேகரித்து வரும் அந்நிறுவனத்தின் குப்பை சேகரிப்பு வாகன ஓட்டுநர் அந்தோணிசாமி, அருகில் உள்ள குப்பைத் தொட்டிகளில் தேடுதலில் ஈடுபட்டார். உயர் அதிகாரிகளும் மீட்பு பணியை மேற்பார்வையிட்டனர். தீவிர தேடுதலுக்கு பின், குப்பை தொட்டிக்குள், மாலையில் சிக்கியிருந்த நகையை கண்டெடுத்தனர்.
அந்தோணிசாமி மற்றும் குப்பை சேகரிப்பு குழுவினர் துரிதமாக செயல்பட்டு விலைமதிப்பற்ற நகையை மீட்டெடுக்க உதவியதற்கு உரிமையாளர் தேவராஜ் நன்றி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu