சேலம் மாவட்டத்தில் குறைந்த வாடகையில் அரசு வேளாண் இயந்திரங்கள்
பைல் படம்.
Agriculture Farm Machinery -சேலம் மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக குறைவான வாடகையில் அரசு வேளாண் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசு வேளாண் பெருமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போதுள்ள வேலையாட்கள் பற்றாக்குறையினை சமாளித்து, வேளாண் பணிகளை குறித்த காலத்தே செய்து முடிப்பதற்காக, வேளாண்மைப் பொறியியல் துறை பல்வேறு புதிய, நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கி, விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கி வருகிறது.
சேலம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மிகுந்த பயனைத்தரக்கூடிய வேளாண் இயந்திரங்களான 5 மண் தள்ளும் இயந்திரங்கள் (Bull Dozer), 12 டிராக்டர்கள், 1 டிராக் வகை மண் அள்ளும் இயந்திரங்கள் (JCB), 3 டயர் வகை மண் அள்ளும் இயந்திரங்கள் (Crawler Excavator),தேங்காய் பறிக்கும் இயந்திரம் 1 இருப்பில் உள்ளன.
மேலும், நிலம் சமன் செய்தல், உயர் பாத்தி அமைத்து, விதைத்தல், கரும்பு/காய்கறி நாற்று நடவு செய்தல், உரத்துடன் விதை விதைத்தல், களை எடுத்தல் அறுவடை, பல்வேறு பயிர்களை கதிரடித்தல், வைக்கோல் கட்டுதல், நிலத்தில் நிலக்கடலை பயிரை தோண்டி எடுத்து, நிலக்கடலைகளை பறித்தல், வாழைத்தண்டை தகளாக்குதல், வரப்பு செதுக்கி சேறு பூசுதல், நீர் இறைத்தல் உள்ளிட்ட பல்வேறு வேளாண் பணிகளை மேற்கொள்வதற்கும் டிராக்டரால் இயங்கக்கூடிய இயந்திரங்களும் வேளாண் பொறியியல் துறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்று டிராக்டரால் இயங்கக்கூடிய அனைத்து கருவிகளும் டிராக்டருடன் மணிக்கு ரூ.500/- என்ற குறைந்த வாடகை அடிப்படையில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாடகைக்கு வழங்கப்படுகின்றன.
இதுபோன்று மண் தள்ளும் இயந்திரம் (Bull Dozer) மணிக்கு ரூ.1,230/-க்கும், மண் அள்ளுவதற்கும், பண்ணைக் குட்டைகள் அமைத்திடவும், புதர்களை அகற்றவும், டிராக் வகை மண் அள்ளும் இயந்திரங்கள் (Crawler Excavator) மணிக்கு ரூ.1,910/-க்கும் சக்கர வகை மண் அள்ளும் இயந்திரங்கள் (JCB) மணிக்கு ரூ.890/-க்கும், தேங்காய் பறிக்கும் இயந்திரம் மணிக்கு ரூ.550/-க்கும் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகின்றன.
இவை அனைத்தும் இவாடகை செயலி மூலம் வீட்டிலிருந்தே முன்பதிவு செய்து பயன்பெறலாம். எனவே, வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மைப் பொறியியல் துறையின் உபகோட்ட அலுவலகத்தினை அணுகலாம்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்கள் (சேலம்) 0427 2905277, 97510 08321, (மேட்டூர்) 04298 230361 , 80723 10693, (ஆத்துார்) 04282 290585, 95435 08877, (சங்க கிரி) 04283 290390, 80726 63411 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் (சேலம்) 0427 2906266, 90470 42238 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu