ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க தருமபுரி மாவட்ட ஆட்சியர் தடை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க தருமபுரி மாவட்ட   ஆட்சியர் தடை
X

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி பைல் படம்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க தருமபுரி மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பி் கூறப்பட்டு இருப்பதாவது:-

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (10.07.2022) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணி நிலவரப்படி சுமார் 8000 கன அடிக்கு மேல் தண்ணீர் வரத்து வந்து கொண்டிருப்பதால் மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்று (10.07.2022) முதல் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ, படகு சவாரி செய்யவோ, ஆற்றின் குறுக்கே கால்நடைகளை அழைத்து செல்லவோ இன்றிலிருந்து (10.07.2022 ஞாயிற்றுக்கிழமை) மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பொதுமக்களின் நலன் கருதி முற்றிலும் தடை விதிக்கப் படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture