ஒரு புறம் கோரிக்கை- மறு புறம் மிரட்டல், ஸ்டாலினின் திட்டம் தான் என்ன?
![ஒரு புறம் கோரிக்கை- மறு புறம் மிரட்டல், ஸ்டாலினின் திட்டம் தான் என்ன? ஒரு புறம் கோரிக்கை- மறு புறம் மிரட்டல், ஸ்டாலினின் திட்டம் தான் என்ன?](https://www.nativenews.in/h-upload/2022/03/15/1497728-rnr.webp)
தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு .க. ஸ்டாலின் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பின்போது கவர்னருக்கு மரியாதை நிமித்தமாக சால்வை அணிவித்த மு.க. ஸ்டாலின் திராவிட மாடல் புத்தகத்தையும் பரிசாக வழங்கியுள்ளார்.
ஆளுநர் உடனான சந்திப்பு பற்றி மு. க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். தமிழக மருத்துவ மாணவர்களுக்கு நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரைவு தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க கோரிக்கை விடுத்ததாகவும் அதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னையில் ஆளுநர் ரவியை சந்தித்து பேசிக் கொண்டிருந்த அதே வேளையில் டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. எம்பிக்கள் குழு தலைவர் டி ஆர் பாலு ஆவேசமாக பேசினார். தமிழக ஆளுநர் பதவியை மாற்றியே தீரவேண்டும். தமிழகத்தில் சட்டத்தை மதிக்காமல் இருக்கும் ஆளுநர் ரவியை மாற்ற வேண்டும் என பேசியது நாடாளுமன்றத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆக ஒருபுறம் ஆளுநருடன் நேரில் நேரடியாக சந்தித்து கோரிக்கை வைத்து இருக்கும் நேரத்தில் டெல்லியில் தி.மு.க. எம்.பி.க்கள் ஆளுநருக்கு மிரட்டல் விடுத்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டாலின் ட்வீட்டரில் பதிவிட்டு இருப்பதுபோல் நீட் பிரச்சனைக்காக தான் ஆளுநரை சந்தித்தாரா இல்லை வேறு ஏதாவது மறைமுக திட்டத்தை ஆளுநரிடம் தெரிவித்தாரா?என தெரியவில்லை.
நீட் தேர்வு விலக்கு தொடர்பான தமிழக அரசின் வரைவுத் திட்ட மசோதா ஏற்கனவே ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிலையில் மீண்டும் முதல்வர் ஸ்டாலின் அதே கோரிக்கையை வலியுறுத்தி இருப்பது நீட் தேர்வு விவகாரம் மீண்டும் புதிய நகர்வை நோக்கி செல்ல தொடங்கி இருக்கிறது என்பது மட்டுமே உண்மை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu