சென்னை புயல் பாதிப்பு: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு
புயல் பாதித்த பகுதிகளை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிடுகிறார் - மாதிரி படம்
மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆகிய தேதிகளில் பெய்த தொடர் கனமழை, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ள நீர் தேங்கியுள்ள இடங்களில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க, வெள்ள நீரை அகற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பல தன்னார்வலர்களும் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்துள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் அவரை வரவேற்றனர்.
தொடர்ந்து அமைச்சர் ராஜ்நாத் சிங், மிக்ஜம் புயல் பாதிப்புகளை ராணுவ ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அவருடன் மத்திய இணையமைச்சர் எல். முருகனும் உள்ளார்.
முன்னதாக, தமிழகத்திற்கு இடைக்கால நிவாரணமாகரூ. 5,060 கோடியினை உடனடியாக வழங்கிடுமாறு முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு புதன்கிழமை கடிதம் எழுதியிருந்தார். இதனை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, தில்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இன்று வழங்கினார். தொடர்ந்து, பிரதமர் மோடியும், புயல் பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் .ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu