தீபாவளிக்கு ஊருக்கு செல்கிறீர்களா? நாளை முன்பதிவு செய்ய தயாராகுங்கள்

தீபாவளிக்கு ஊருக்கு செல்கிறீர்களா? நாளை முன்பதிவு செய்ய தயாராகுங்கள்
X

பைல் படம்.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் முதன்மையானது தீபாவளி. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையானது வருகிற அக்டோபர் மாதம் 24-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. பெரும்பாலும் தீபாவளி பண்டிகையையொட்டி இந்துக்கள் மட்டுமின்றி பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வது உண்டு. அந்த நேரங்களில் ரயில், பஸ்களில் கூட்டம் அலைமோதுவது இயற்கை.

இதனை தவிர்ப்பதற்காக சொகுசான அதேசமயம் பாதுகாப்பான ரயில் பயணத்தை மேற்கொள்வதற்கு ரயில்களில் முன்பதிவு செய்வது உண்டு. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சுமார் நான்கு மாதங்கள் உள்ள நிலையில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு செய்வதற்கான வசதி நாளை வியாழக்கிழமை தொடங்குகிறது. அக்டோபர் 21-ம் தேதி பயணிக்க விரும்புபவர்கள் நாளையும், 22ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளை மறுநாளும், 23ஆம் தேதி பயணிக்க விரும்புபவர்கள் சனிக்கிழமையும் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!