அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்படுமா?குழப்பத்தில் உயர்கல்வித்துறை
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆட்சி காலத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தை தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலை என்றும் மற்ற இன்ஜினியரிங் கல்லூரிகளை சேர்த்து ஓர் பல்கலை என்று இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் இதற்கு சட்டசபையில் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த ஆட்சி காலத்தில் திமுக எம்.எல்.ஏ வாக இருந்த தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் மண்டல அளவில் அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிக்கலாம் என்று சட்டசபையில் வலியுறுத்தினார். தற்போது அதற்கான மசோதா கவர்னரிடம் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ஸ்டாலின் அவர்களும் உயர் கல்வித்துறை அமைச்சராக பொன்முடி அவர்களும் பதவி ஏற்றுள்ளனர்.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வரை அண்ணா பல்கலைக்கழக பிரிப்பு குறித்து எந்த ஒரு முறையான அறிக்கையும் வெளிவராத நிலையில் உயர் கல்வித்துறை குழப்பம் அடைந்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தர் தேர்வு, மாணவர் சேர்க்கை, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்குவது போன்ற பல பணிகள் நிலுவையில் உள்ள நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu