உயிர்க்கொல்லி கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறி பற்றி தெரியுமா உங்களுக்கு?

கொரோனா காலகட்டத்தில் கொரோனாவிற்கு அடுத்தபடியாக அதிக அளவில் பேசப்பட்டது கருப்பு பூஞ்சை நோய் பற்றி தான்.கொரோனா உயிரிழப்பு தமிழகத்தில் தற்போது முழு அளவில் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது என்றாலும் இந்த உயிர்க்கொல்லி நோயான கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள் தமிழகம் முழுவதும் பரவலாக இருப்பதாக தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இந்த நோயின் அறிகுறிகள் எப்படியிருக்கும் என்பது பற்றி பொது சுகாதாரத் துறையின் இயக்குனர் டாக்டர் நாராயண பாபு கூறுகையில்
கண்ணுக்கு அடியில் வீக்கம் இருப்பது, தொடர்ந்து தலைவலி ஏற்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் ஆகும். இந்த நோய் அறிகுறி கண்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும். உடனடியாக சிகிச்சை பெற்றால் இந்த உயிர்க்கொல்லி நோயை முற்றிலுமாக குணமாக்கி விட முடியும்.இல்லை என்றால் இந்த நோய் கண் பார்வையை முழுவதுமாக பாதிக்கும். அத்துடன் மூளையை பாதிக்கும் .நுரையீரலை பாதித்து உயிர் இழப்பை ஏற்படுத்திவிடும்.
இந்த நோய் புதிய நோய் உள்ள 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நோய் தான் தற்போது உரு மாறி கருப்பு பூஞ்சை என்ற பெயரில் வந்துள்ளது.நீரிழிவு நோயால் அதிகமாக பாதிக்கப்பட்டு ஸ்டீராய்டு எடுத்துக்கொள்பவர்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்களுக்கு இந்த நோய் தொற்று எளிதாக பரவும் வாய்ப்பு உள்ளது. ஆதலால் இந்த நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் இதன் அறிகுறிகளை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu