Darapuram Accident- தாராபுரம் அருகே நடந்த சாலைவிபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

Darapuram Accident- தாராபுரம் அருகே நடந்த சாலைவிபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
X

Darapuram Accident- தாராபுரம் அருகே நடந்த விபத்தில் லாரியில் மோதி அப்பளம் போல நொறுங்கிய கார். 

Darapuram Accident- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே டேங்கர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

Darapuram Accident, 5 Dead Including 3 Women, Truck, Car Collision- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே காரும், டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், காரில் பயணம் செய்த 3 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியிலிருந்து குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, தாராபுரம் நோக்கி காரில் ஒரு குடும்பத்தினர் வந்து கொண்டிருந்த போது, கோவையில் இருந்து பெட்ரோல் ஏற்றிக் கொண்டு பழனி நோக்கி சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியும், காரும் தாராபுரம்-பழனி சாலை, மனக்கடவு பகுதி அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

வியாழக்கிழமை (இன்று) மாலை சுமார் 4.30 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்..

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அலங்கியம் போலீசார், உயிரிழந்தோரின் சடலங்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காரில் பயணித்த ஐந்து நபர்களும் உயிரிழந்துள்ள நிலையில், பழனியில் இருந்து செல்கிறார்களா? அல்லது கொடைக்கானல் பகுதியில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு செல்கிறார்களா? என்கிற கோணத்திலும், விசாரித்து வருகின்றனர்.

விபத்தில் இறந்தவர்களின் பெயர்கள் தமிழ்மணி, பாலகிருஷ்ணன், சித்ரா, செல்வராணி, கலாராணி எனத் தெரிய வந்துள்ளது. இவர்கள் பயணித்த வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு இவர்கள் எந்த ஊர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்