கியூஆர் குறியீட்டுடன் தினசரி காலண்டர்.. சிவகாசியில் அசத்தல்

கியூஆர் குறியீட்டுடன் தினசரி காலண்டர்.. சிவகாசியில் அசத்தல்
X
சிவகாசி நிறுவனங்கள் கியூஆர் குறியீட்டுடன் தினசரி காலண்டர் வெளியிட்டு அசத்தியுள்ளது.

சிவகாசி நிறுவனங்கள் கியூஆர் குறியீட்டுடன் தினசரி காலண்டர் வெளியிட்டு அசத்தியுள்ளது.

கியூஆர் குறியீடு அல்லது Quick Response code என்பது ஒரு இரு பரிமாண பார்கோடு ஆகும். இது QR குறியீடு ஸ்கேனர் பொருத்தப்பட்ட ஸ்மார்ட்போன் அல்லது பிற சாதனத்தால் படிக்க முடியும். இந்தக் குறியீடுகள் URLகள் அல்லது பிற தரவு போன்ற தகவல்களைச் சேமித்து அனுப்புவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் இணையதளம் அல்லது பிற ஆன்லைன் ஆதாரங்களுக்கு பயனர்களை வழிநடத்த சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரங்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.

சமீபகாலமாக பெரு மற்றும் சிறு நிறுவனங்களில் கூட ஊழியர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகளில் கியூஆர் குறியீட்டை பயன்படுத்தி வருகின்னறர். இதனால் பல தகவல்களின் உள்ளடக்கத்தை இது குறைக்கிறது என கூறலாம்.

இந்த குறியீட்டை பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன் அல்லது பிற சாதனம் மூலம் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் அதன் விபரங்களை காண அனுமதிக்கும். மேலும் ஒரு URL ஐ உள்ளிடவோ அல்லது ஆன்லைனில் கட்டுரையைத் தேடவோ தேவையில்லை என்பதால், பயனர்களுக்கு உள்ளடக்கத்தை வழங்க இது ஒரு வசதியான வழியாகும்.

இந்த நிலையில் தற்போது தினசரி காலண்டர்களில் கியூஆர் குறியீடுகள் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகத்தில் இது ஒரு புதுவித முயற்சியாகவும் கருதப்படுகிறது. காலண்டர்களை அச்சிடும் சிவகாசியைச் சேர்ந்த நிறுவனங்கள் சில இதுமாதிரியான காலண்டர்களை அச்சிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இது தற்போது சமூகவலைதளங்கள் உள்ளிட்ட இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஒட்டுமொத்தமாக, தினசரி காலெண்டரில் ஒரு கட்டுரையை QR குறியீடாக உள்ளடக்குவது பயனர்களுக்கு உள்ளடக்கத்தை வழங்குவதற்கான வசதியான வழியாகும்.

பொதுவாக தினசரி காலண்டர்களில் தேதியில் துவங்கி நல்ல நேரம், ராகு காலம், குளிகை, எமகண்டம், இந்த நாளின் நிகழ்வுகள், சந்திராஷ்டமம், திதி, ராசி பலன் உள்ளிட்ட ஏராளமான தகவல்களை ஒரே ஒரு சிறிய தாளில் அச்சிடப்பட்டிருக்கும். இந்த தகவல்களை ஒரே ஒரு கியூஆர் குறியீட்டின் மூலம் உள்ளடக்கி காண்பித்துவிடலாம். இதைதான் தற்போது காலண்டர்கள் அச்சிடும் நிறுவனங்கள் முன்னெடுத்துள்ளது.

மேலும் இந்த மாதிரியான காலண்டர்களில் கியூஆர் குறியீட்டை தங்களது மொபைல் போனில் உள்ள ஸ்கேனர் செயலி மூலம் ஸ்கேன் செய்யும் போது அன்றைய நாளின் சிறப்பை 2 நிமிட வீடியோவை நமக்கு காண்பித்துவிடுமாம். ஆச்சர்யப்பட வைக்கும் இது மாதிரியான காலண்டர்களை சிவகாசி நிறுவனங்கள் செய்து அசத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் உலகத்தில் இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுமாதிரியான கியூஆர் குறியீடுகள் உருவாக்குவதற்கான ஏராளமான இணையத்தளங்கள் தற்போது ஆன்லைனில் உள்ளன. நீங்களும் கியூஆர் குறியீடுகளை உருவாக்கலாம்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது