அரிசிக்கொம்பன் யானையின் தற்போதைய நிலை: வனத்துறை விளக்கம்
முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் அரிசிக் கொம்பன்
அரிசிக்கொம்பன் யானையின் தற்போதைய நிலை குறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் சண்முக பிரியா தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி மாவட்டத்தில் கடந்த வாரம் பிடிக்கப்பட்ட அரிசிக்கொம்பன் யானை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பத்திற்கு உட்பட்ட மேல் கோதையாரில் உள்ள குட்டியார் அணைப்பகுதியில் விடப்பட்டது. அரிசிக்கொம்பன் யானையானது தற்பொழுது நல்ல உடல்நலத்துடன் சீரான உணவு மற்றும் நீர் எடுத்துக் கொள்கிறது.
யானையின் நடமாட்டத்தினை களக்காடு, அம்பாசமுத்திரம் மற்றும் கன்னியாகுமரி வனக்கோட்ட பணியாளர்கள் இரவு பகலாக வருகின்றனர். ஜூன் 6ம் தேதி முதல் வன கண்காணித்து உயர் அதிகாரிகள், கால்நடை மருத்துவக்குழு. முன் களப் பணியாளர்கள் உள்ளடக்கிய மொத்தம் 6 குழுக்கள் அரிசிக்கொம்பன் கழுத்தில் பொறுத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் தொழில்நுட்பம் மூலம் யானையின் நடமாட்டம் துல்லியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வனத்துறை சார்பாக யானைக்கும், பொது மக்களுக்கும் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசிக்கொம்பன் என்ற பெயர் வந்தது எப்படி...
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், வட்டக்கானல் வனப்பகுதியில் அரிசிக் கொம்பன் என்னும் காட்டு யானையின் நடமாட்டம் அதிகம் இருந்தது. இதுவரை 8 பேர் இந்த யானை தாக்கி இறந்துள்ளனர். ரேஷன் கடைகளை தாக்கி அரிசியை விருப்ப உணவாக உண்டதால் இதனை கேரளாவில் ‘அரிசிக் கொம்பன்’ யானை என்ற பெயரிட்டு அழைத்தனர். தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்ததால் இந்த யானையை காட்டுப் பகுதிக்கு விரட்ட கேரள வனத்துறையினர் முடிவு செய்தனர்.இதன்படி, கடந்த ஏப்.29-ம் தேதி இந்த யானைக்கு மயக்க ஊசி போட்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பத்திற்கு உட்பட்ட மேல் கோதையாரில் உள்ள குட்டியார் அணைப்பகுதியில் விடப்பட்டது.. இதன் நடமாட்டத்தை தெரிந்து கொள்ள வசதியாக இதன் கழுத்தில் சாட்டிலைட் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு தற்போது இந்த யானையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu