விருதாச்சலம்: தனியாக பேச அழைத்த காதலன் சுத்தியால் தாக்கியது ஏன்?

விருதாச்சலம்: தனியாக பேச அழைத்த காதலன் சுத்தியால் தாக்கியது ஏன்?
X

காதலியை சுத்தியலால் தாக்கியதாக கைது செய்யப்பட்ட ஸ்ரீதர்

விருத்தாசலத்தில் முள் காட்டில் தலையில் காயங்களுடன் இளம்பெண் மீட்பு. காதலனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கார்மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர், குறிஞ்சிப்பாடி அருகே பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரம்யா கிருஷ்ணனுக்கும் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் வருகின்ற 10-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில் ஸ்ரீதர் ரம்யாகிருஷ்ணனை கார்மாங்குடி வெள்ளாற்று அருகே தனியாக தனது டூவீலரில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ஸ்ரீதருக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதில் ஸ்ரீதர் ரம்யாகிருஷ்ணனை கொலை செய்யும் நோக்கத்தோடு அவர் பையில் வைத்திருந்த சுத்தியலால் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயம் ஏற்பட்ட ரம்யாகிருஷ்ணன் கூச்சலிட அப்பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார் விவசாயிகள் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். அப்போது முட்புதரில் ரம்யா கிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.அதன்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரம்யாகிருஷ்ணனை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் ரம்யாகிருஷ்ணன் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு தற்போது பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

தப்பி ஓடிய காதலன் ஸ்ரீதரை போலீசார் கைது செய்தனர். காதலி வேறொரு வாலிபருடன் திருமணம் செய்யப் போகிறாள் என்ற விரக்தியில் காதலியை திட்டமிட்டு கொலை செய்யும் நோக்கத்தில் சுத்தியலால் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

மேலும், இரண்டு பேரும் வெவ்வேறு சமூகம் என்பதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!