பராமரிப்பின்றி கிடக்கும் விருதாச்சலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன்

விருதாச்சலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன்
கடலூர் மாவட்டத்தில் விருத்தாச்சலம் நகரத்தில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தின் வழியாக தென் மாவட்டங்களில் இருந்து வட மாவட்டங்களுக்கும், வட மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் அடிக்கடி ரயில்கள் சென்று வருகிறது.
இதேபோல பெங்களூர், கடலூர், பாண்டிச்சேரி, காரைக்கால் மற்றும் சேலத்திற்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் விருதாச்சலம் ரயில் நிலையத்திலிருந்து தங்கள் செல்லும் ஊருக்கு ரயிலில் செல்வது வழக்கம். விருத்தாச்சலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் டவுன் ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. விருத்தாசலம் நகர் பகுதியில் இருந்து திருச்சி மதுரை விழுப்புரம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வதற்கு டவுன் ஸ்டேஷனில் நின்று செல்லும் பேசஞ்சர் ரயில்களில் பயணிகள் பயணம் செய்து சென்று வருவது வழக்கம்.
இதற்காக பல கோடி மதிப்பில் விருதாச்சலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் பராமரிக்கப்பட்டு நல்ல நிலையில் இயங்கி வந்தது. ஆனால் தற்போது முறையான பராமரிப்பின்றி டவுன் ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. டவுன் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சிமெண்ட் சாலையில் இரண்டு பக்கங்களிலும் கருவை மரங்கள் சாலையில் செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமித்துள்ளன. நடைபாதைகள் அனைத்தும் சேதம் அடைந்து உடைந்து காணப்படுகின்றன. ரயிலிலிருந்து இறங்கி ஏறும், பயணிகள் நடைபாதையில் ஒரு பக்கத்தில் கால் வைத்தால் மற்றொரு பக்கம் தூக்கி கொள்வதால் பயணிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நடைபாதையில் புற்கள், செடி, கொடிகள் விளைந்து பராமரிப்பின்றி உள்ளது. பயணிகள் காத்திருக்கும் இருக்கைகள் உடைக்கப்பட்டு சேதமடைந்து கிடக்கின்றன.
டவுன் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே ஊழியர்கள் யாரும் இல்லாததால் அப்பகுதி முழுவதும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. சூதாட்டம் விளையாடுவதற்கும், கஞ்சா போதையில் மிதப்பதற்கும், மது திளைப்பபதற்குமான இடமாக சிலர் பயன்படுத்தி வருகின்றனர். ரயில்வே நிலையத்தில் உள்ள கழிவறையை உடைத்து கழிவறையையும் சேதப்படுத்தியுள்ளனர். பல கோடி செலவு செய்து பராமரிக்கப்பட்டு வந்த ரயில்வே நிலையம் தற்போது ரயில்வே ஊழியர்கள் யாரும் பாதுகாப்பு பணியில் இல்லாததால் பராமரிப்பின்றி கிடப்பதால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அப்பகுதி மக்கள் மலம் கழிக்கும் கழிவறையாக டவுன் ரயில்வே ஸ்டேஷனை பயன்படுத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பல கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட டவுன் ரயில்வே ஸ்டேஷனை உடனடியாக சீரமைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu