விருத்தாசலத்தில் திருநங்கைக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய பெற்றோர்

விருத்தாசலத்தில் திருநங்கைக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய பெற்றோர்
X

திருநங்கைக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தப்பட்டது.

விருத்தாசலத்தில் 21 வயது நிஷா என்ற திருநங்கைக்கு பெற்றோர்கள் செய்து வைத்த மஞ்சள் நீராட்டு விழா நடத்தினர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வீரபாண்டியன் தெருவை சேர்ந்தவர் நிஷா,இவர் தனது 16வயதில் இருந்தே தனது உடலில் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றத்தால் தான் திருநங்கையாக மாறவேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும்,அதற்கு பெற்றோர்கள் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வீட்டை விட்டு வெளியேற்றிய நிஷா விடுதியில் தங்கிக்கொண்டு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்தார்.பின்னர் தனது பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி ஆபரேஷன் செய்துகொண்டார். பொதுவாக ஆபரேஷன் முடிந்து ஒரு வருடம் முடிந்த பிறகு மறு வருடம் அதே நாளில் திருநங்கைகள் சேர்ந்து சடங்கு செய்வது வழக்கம்.

ஆனால் நிஷாவின் பெற்றோர் பெண்களுக்கு செய்யும் மஞ்சள் நீராட்டுவிழா போல் நிஷாவிற்கு அலங்காரம் செய்து கொண்டாடினர். உறவினர்கள் நண்பர்கள் அக்கம்பக்கம் விட்டார் என பலரும் கலந்து கொண்டனர்,இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!