சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பள்ளி தாளாளர் கைது

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பள்ளி தாளாளர் கைது
X

கடலூரில் மாணவிகளின் புகாரில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் 

கடலூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த வீராரெட்டிக்குப்பம் கிராமத்தில் அமலா சிறுவர் சிறுமியர் இல்லம் மற்றும் அமலா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி உள்ளது.இங்கு ஏழை, எளிய மற்றும் ஆதரவற்ற சிறுவர், சிறுமியர் 100க்கும் மேற்பட்டோர் தங்கி படிக்கின்றனர்.

இந்த இல்லத்தில் தங்கி இருந்த மாணவிகள் மூன்று சிறுமிகளை 25ம் தேதி காணவில்லை என பள்ளியின் தாளாளர் ஜேசுதாஸ்ராஜா ஆலடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமிகளை தேடினர்.

மூவரையும் கண்டுபிடித்த போலீசார், கடலுார் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அஜர்படுத்தினர். விசாரணை மேற்கொண்ட மேஜிஸ்ட்ரேட் இடம் . பள்ளி தாளாளர் ஜேசுதாஸ்ராஜா, சிறுமியர் மூவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து ஆலடி போலீசார் ஜேசுதாஸ்ராஜா மீது வழக்குப் பதிந்து, அவரை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.

பள்ளி தாளாளர் சிறுமியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், அமலா சிறுவர் சிறுமியர் இல்லத்தில் இருந்த 40 சிறுமியர், கடலுார் சிறுமியர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஜேசுதாஸ் ராஜா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டிய நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நீதிபதி எழிலரசி குற்றவாளியை நேரில் சந்தித்து விசாரணை நடத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Tags

Next Story