விருத்தகிரீஸ்வரர் கோயிலில் திருடு போன கலசங்கள் மீட்பு: ஒருவர் கைது

விருத்தகிரீஸ்வரர் கோயிலில் திருடு போன கலசங்கள் மீட்பு: ஒருவர் கைது
X

மீட்கப்பட்ட கோவில் கலசங்களுடன் கைதான சந்தோஷ்குமார்.

விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் திருடுபோன தங்கமுலாம் பூசப்பட்ட 3 கலசங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்து 28நாட்கள் ஆன நிலையில் திருக்கோவில் விருதம்பிகை சன்னதியில் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் மர்ம நபர்கள் திருடிச்சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட 3 தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களை விருத்தாசலம் பெரியார் நகர் அமுதம் தெருவில் மறைத்து வைத்திருந்த சந்தோஷ்குமார் என்பரிடமிருந்து காவல் துறையினர் பறிமுதல் செய்து கைது செய்தனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி