விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அமைக்க கோரி அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அமைக்க கோரி  அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்
X
விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு, புதிய மாவட்டம் அமைக்க கோரி தமிழக முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

கடந்த தமிழக சட்ட மன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு, புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். தேர்தலில் திமுக வெற்றிபெற்று முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின்போது அவர் அளித்த வாக்குறுதியை அடிப்படையாகக் கொண்டு, கடலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு, புதிய மாவட்டம் உருவாக்கக் கோரி, விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் உள்ள துணை அஞ்சலக அலுவலகம் எதிரே பொது நல அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில், முதல்வர் ஸ்டாலினுக்கு, கோரிக்கை அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தங்களது கோரிக்கை அஞ்சல் அட்டைகளை, மங்கலம்பேட்டை துணை அஞ்சலகத்தில் உள்ள அஞ்சல் பெட்டியில் போட்டனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்