விருத்தாசலம் எடச்சித்தூர் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியை சீரமைக்க கோரிக்கை

விருத்தாசலம் எடச்சித்தூர் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியை சீரமைக்க கோரிக்கை
X

பாசி படர்ந்துள்ள நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க  தொட்டி

விருத்தாசலம் அருகே எடச்சித்தூர் கிராமத்தில் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் எடச்சித்தூர் கிராமத்தில் 60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்கத் தொட்டியின் வழியாக கிராம பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நீர் தேக்கத் தொட்டியின் மேற்பகுதி முழுவதும் பழுதாகி இதனால் நீர்த்தேக்க தொட்டி மாசு அடைந்து அசுத்த நீரை பருகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பச்சை நிற பாசிகள் அதிகமாக குழாய் வழியாக வருவதால் குடிநீரை பருக முடியாத சூழல் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த நீர்த் தேக்கத் தொட்டியில் மேற்புறம் உடைந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இப்பகுதி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் நோய்தொற்றும் அபாயம் உள்ளது, ஊராட்சி தலைவரிடம் பல தடவை சொல்லியும் நடவடிக்கை இல்லை, குடிநீர் பிரச்சினையை போக்கவும், தொற்று நோய் பரவும் அபாயத்தை தடுக்கவும் கூடிய விரைவில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story