விருத்தாசலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவரை தாக்கிய கண்டக்டர் கைது

விருத்தாசலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவரை தாக்கிய கண்டக்டர் கைது
X
கைது செய்யப்பட்ட கண்டக்டர் வீரமணி.
விருத்தாசலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவரை கடுமையாக தாக்கிய தனியார் பஸ் கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையத்தில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனியார் பேருந்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கண்ணப்பன் என்பவர் ஏறியுள்ளார்.

அப்போது பேருந்துக்குள் நின்றுகொண்டிருந்த நடத்துனர் டிக்கெட் எடுக்கும் படி கேட்டு உள்ளார். அந்த நேரத்தில் நடத்துனர் வைத்திருந்த பையை கண்ணப்பன் பிடித்து இழுத்துள்ளார். ஏன் பையை இழுக்கிறீர்கள் என கண்ணப்பணிடம் நடத்துனர் கேட்ட பொழுது மனநலம் பாதிக்கப்பட்ட கண்ணப்பன் தன் காலில் போட்டிருந்த செருப்பை கழட்டி நடத்துனரை தாக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பேருந்தில் இருந்த இரண்டு நடத்துனர்களும் மனநலம் பாதிக்கப்பட்ட கண்ணப்பனைை தாக்கியுள்ளனர்.கண்ணப்பனை பேருந்தில் இருந்து கீழே இறக்கி அவர் செருப்பால் அடித்தது போல நடத்துனர்களும், கண்ணப்பனை செருப்பால் அடித்து தகாத வார்த்தைகளால் அவரை திட்டி, பேருந்து நிலையத்தில் தர தரவென இழுத்துச் சென்றுள்ளார்கள். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, விருத்தாசலம் காவல் துறையினரிடம் முகிலன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நடத்துனர் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவரை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வீரமணி என்ற நடத்துனர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்