கரும்பு வெட்டும் தொழிலாளிகளிடம் ஓட்டு கேட்ட பிரேமலதா விஜயகாந்த்

கரும்பு வெட்டும் தொழிலாளிகளிடம்    ஓட்டு கேட்ட பிரேமலதா விஜயகாந்த்
X
கரும்பு வெட்டும் தொழிலாளர்களிடம் நேரடியாக தோட்டத்திற்கு சென்று தே.மு.தி.க. பிரேமலதா ஓட்டு கேட்டார்.

சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்க உள்ளது. அரசியல் காட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். விஜகாந்த் கட்சியான தே.மு.தி.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில் கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளர்களை பார்த்த பிரேமலதா விஜயகாந்த்,பிரசார வாகனத்தை விட்டு இறங்கி வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் ஓட்டு கேட்டார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணியின் சார்பில் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக நிற்கும் தே.மு.தி.க மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருவேப்பிலங்குறிச்சியில் கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளர்களிடம் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பின்னர் அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு பிரசார வாகனத்தில் வாக்கு சேகரிப்புக்காக வேறு இடங்களுக்கு சென்றார்.



Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி