கடலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் நீரிழ் மூழ்கி வீணான நெற்பயிர்கள்

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் நீரிழ் மூழ்கி  வீணான நெற்பயிர்கள்
X

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பல ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு - நிவாரணம் வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை.

கடலூர் மாவட்டத்தில் நடப்பு குறுவை சாகுபடி முடிவடைந்து, சம்பா சாகுபடி செய்வதற்காக நடவு செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது, இதனிடையே பருவமழை மற்றும் வெப்பசலனம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் விருத்தாச்சலம்,ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோயில் ஆகிய பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மாலை நேரஙகளில் மழை அதிக அளவில் பெய்து வருகிறது.

விருதாச்சலம் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் பயிர் செய்த விளைநிலங்களில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் சுமார் 100 ஏக்கருக்கு மேலாக பாழாகி உள்ளது.விவசாயிகள் மிகவும் வேதனையுடன் காணப்படுகின்றனர் இதனால் கடலூர் மாவட்ட விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கும் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். வேளாண் துறை அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டு நிவாரணம் வழங்குமாறு கேட்டுக் கொண்டனர்.

Tags

Next Story