பிரேமலதா விஜயகாந்த் வேட்புமனு தாக்கல்

பிரேமலதா விஜயகாந்த் வேட்புமனு தாக்கல்
X

விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட பிரேமலதா விஜயகாந்த் வேட்புமனு தாக்கல் செய்தார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் தே.மு.தி.க மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவரது பிறந்த நாளான இன்று வேட்புமனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2006 தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். தொடர்ந்து 2011 சட்டமன்ற தேர்தலில் முத்துக்குமார் தேமுதிக சார்பில் போட்டியிட்டு இரண்டாவது முறையும் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியை தேமுதிக கைப்பற்றியது.

தற்போது 2021 சட்டமன்ற தேர்தலில் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் பிரேமலதா வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். முன்னதாக தனது பிறந்தநாளை முன்னிட்டு விருதகிரீஸ்வரர் ஆலயத்தில் சாமிதரிசனம் செய்து பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து பிரேமலதாவிஜயகாந்த் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் விருத்தாசலம் சப்கலெக்டர் பிரவின்குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்