மயானத்திற்கு செல்ல வழியின்றி திண்டாடும் மக்கள்

மயானத்திற்கு செல்ல வழியின்றி திண்டாடும் மக்கள்
X

கடலூர் மாவட்டத்தில் மயானத்திற்கு செல்ல வழியில்லாமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், விருதாச்சலம் தாலுக்கா, விருதை தொகுதிக்கு உட்பட்ட கொடுக்கூர் கிராமத்தில் இறந்த ஒருவரின் உடலை வயல்வெளி வழியாக சுமந்து சென்று அந்த உடலை மயானத்தில் அடக்கம் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலை பல ஆண்டுகளாக நீடித்து கொண்டிருக்கிறது. கொடுக்கூர் கிராம மக்கள் இளைஞர்கள் இந்த பிரச்சனையை தீர்க்க பல ஆண்டுகாலமாக முயற்சி செய்து வருகின்றனர்.ஆனால் இதில் எந்த மாற்றமும் இல்லாமல் வயலை தாண்டி தான் செல்ல வேண்டி உள்ளது. இனியாவது மாவட்ட நிர்வாகம் இந்த மக்களுக்கு இடுகாட்டுக்கு செல்ல வழி ஏற்படுத்தித் தருமாறும் ஊர் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story