விபரீதமான நீச்சல் பயிற்சியில் ஈடுபட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

விபரீதமான நீச்சல் பயிற்சியில் ஈடுபட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு
X

நீரில் மூழ்கி இறந்த கமலி.

கடலூர் அருகே கிணற்றில் நீச்சல் கற்றுக் கொள்ள முயன்ற போது சிறுமி பரிதாபமாக நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தாள்.

கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அடுத்த எஸ்.நரையூர் கிராமத்தில் வசித்துவரும் அன்புச்செல்வன் என்பவரின் மகள் கமலி. அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் இன்று மதியம் நீச்சல் பழகுவதற்காக நான்கு சக்கர வாகனத்தின் டியூப் ஒன்றை அணிந்து கொண்டு கிணற்று நீரில் நீச்சல் பழகிய போது எதிர்பாராத விதமாக உடலில் கட்டியிருந்த ட்யூப் கழண்டு கொண்டதால் நீரில் மூழ்கியுள்ளார்.

அருகில் உள்ளவர்கள் இரண்டு மணி நேரமாக மீட்க முயற்சித்தும் முடியாததால் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிறுப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!