சர்வதேச கபடி போட்டியில் வெள்ளிப்பதக்கம்: சொந்த ஊரில் மாணவிக்கு வரவேற்பு
சர்வதேச அளவிலான பெண்கள் கபடி போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய மீனாட்சிக்கு ஊர் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பெண்கள் கபடி போட்டியில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கண்டமத்தான் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி மீனாட்சி பெண்கள் அணியின் கேப்டனாக இருந்து வெற்றி பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பதக்கம் வென்று திரும்பிய மீனாட்சிக்கு ஊர் கிராம மக்கள் பேருந்து நிலையம் முதல் மேளதாளங்களுடன் மலர்தூவி, பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனிடையே கபடி போட்டியில் வெற்றி பெற்ற மாணவி மீனாட்சி அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழிதேவன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். மாணவியை வாழ்த்தி ஊக்கப்படுத்தினார் சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழித்தேவன்.
பங்களாதேஷில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான கபடிப் போட்டியில் தமிழகத்தில் இருந்து மீனாட்சி கலந்துகொள்ள உள்ளார், இந்தப் பேட்டியில் கலந்து கொண்டு தங்கம் வெல்வதை குறிக்கோளாக கொண்டு முழு பயிற்சியில் ஈடுபட போவதாகவும் அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu