வேப்பூர் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிருடன் மீட்பு

வேப்பூர் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிருடன் மீட்பு
X

உயிருடன் மீட்கப்பட்ட பிரதீப்

வேப்பூர் அருகே ஆற்று வெள்ள நீரை வேடிக்கை பார்த்த போது அடித்து செல்லப்பட்ட சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவன் சூர்யா. இவருடைய நண்பர்கள் மூன்று பேருடன் நல்லூர் அருகே செல்லும் மணிமுக்தா ஆற்றில் வெள்ள நீரை பார்க்க சென்றுள்ளனர்.

நான்கு பேரும் ஆற்றின் கரையில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த பொழுது திடீரென சூர்யா மற்றும் அதே ஊரைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் பிரதீப் ஆற்றுநீரில் தவறி விழுந்துள்ளனர், இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அங்கிருந்த இளைஞர் ஒருவர் ஆற்றில் குதித்து பிரதீப் என்ற, மாணவனை உயிருடன் மீட்டார். மேலும் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட சூரியாவை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!