இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் தனியார் பேருந்து மோதி பலி

இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர்  தனியார் பேருந்து மோதி பலி
X
3 பேரை பலி கொண்ட சாலை விபத்து.
திட்டக்குடி அருகே தனியார் பேருந்து-இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்புசாமி இவரது மனைவி செல்வராணி மற்றும் உறவினர் ஆறுமுகம், விஜய் நான்கு பேரும் மோட்டார் சைக்கிளில் பெண்ணாடத்திலிருந்து மருதத்தூர் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது வேப்பூரில் இருந்து பெண்ணாடம் நோக்கி தனியார் பேருந்து வந்து கொண்டிருக்கும்போது மேலூர் அருகே வளைவில் தனியார் பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்தில் கருப்புசாமி, ஆறுமுகம் இரண்டு பேரும் பலியானார்கள். கருப்புசாமி மனைவி செல்வராணி மற்றும் விஜய் பலத்த காயம் ஏற்பட்டு அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மருத்துவமனைக்கு போகும் வழியில் விஜய் இறந்து விட்டார்.ஒரே மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் சென்று 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து வேப்பூர் காவல் நிலைய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்